தான் தோன்றி அம்மன் திருக்கோயில்
தாந்தோணியம்மன்
தான் தோன்றி அம்மன் திருக்கோயில்
தல வரலாறு
இந்த திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா சங்கீதவாடி கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த திருத் தலமானது நூறு வருடங்களுக்கு மேலாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருத்தலத்தில் உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதப்படுகிறது.ஒரு காலத்தில் இந்த அம்மன் பூமிக்கு அடியில் இருந்தாதகவும்,
பின்னர் தானே தோன்றியாகம் கூறப்படும் காரணத்தால் இதை தான் தோன்றி அம்மன் எனவும் கூறுவார் . இப்பெயரே நாளடைவில் தாந்தோணியம்மன் என்று மாறியதாகமவும் கூறப்படுகிறது.
இந்த சக்தி வாயிந்த அம்மன் பல பக்கதர்களுக்கு அருள் பாலித்து, நன்மை செய்துள்ளதை இங்கு உள்ள பக்தர்கள் கூறுவதை காணலாம்.
அணு தினமும் பல நூறு பக்தர்கள் வருவதை காணலாம்.
பிரதி வெள்ளி அன்றும் , சுப நாட்களிலும் இங்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பிரதி வருடம் ஆடி மாதம், அணைத்து வெள்ளி தினம் விஷேச பூஜை மிக விமரசியாக நடைபெறும். அச்சமயம் அன்னதானம், அம்மன் திருவீதி உலா, வான வேடிக்கை, நாடகம் , ஒயிலாட்டம், மயிலாட்டம் நடைபெறுவது கண் கொள்ள கட்சியாக இருக்கும்.
பக்த கோடிகள்வருகை தந்து அம்மன் அருள் பெறுக!
0 Comments