புகழ்பெற்ற யோக இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் இடது கையை இதயத்தின் மேல் வைத்தவாறும் அவருக்கு எதிரில் அனுமன் வேத மந்திரத்தைப் படித்துக்காட்டுவது மாதிரியும் சிற்பங்கள் அமைந்துள்ளன.
மிக நேர்த்தியான வாயிற்காவலர்கள் சிற்பம் அமைந்துள்ளது. இச்சந்நிதியை அடுத்து செங்கமலவல்லி தாயார் சந்நிதி அமைந்துள்ளது. இதன் எதிரில் அமைந்துள்ள முக மண்டபத்தில் இராமாயண , தசாவதார சிற்பங்கள், கிருஷ்ணலீலை, கிருஷ்ணதேவராயர் சிற்பம் (கிருஷ்ண தேவராயருக்கு தனிச் சிற்பம் அமைந்துள்ள குறிப்பிடத்தக்கதாகும்) இக்கோயிலின் அமைந்துள்ள தொங்கும் தாமரைச் சிற்பமும், ராமன் வாலி சண்டை சிற்பங்கள், கிருஷ்ணலீலை, சுக்கிரிவன் வாலி சிற்பங்கள், கிருஷ்ணதேவராயர் சிற்பம், போன்றவை கண்டுகளிக்கத்தக்கவை.
விஜயநகர பேரரசர்கள் காலத்தில் கட்டப்பெற்ற இக்கோயில் அழகிய சிற்ப வேலைப்பாடும், வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளும் அமைந்துள்ளது. சேத்துப்பட்டு – வந்தவாசி நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டில் இருந்து 5 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.
0 Comments