திருவண்ணாமலை
மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்த பெரிய கோயிலாகவும் விஜயநகர கட்ட்டக்கலைக்கு சிறந்த சான்றாகவும் அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைமீதுள்ள பொன்மலைநாதர் ஆலயமும் ஆகும்.
இக்கோயில்களில்
சுமார் 10000 க்கும் மேற்பட்ட சிற்பங்களும், 60 கல்வெட்டுகளும் உள்ளன. விஜயநகர பேரரசர் காலத்தில் புகழ்பெற்ற வணிக நகராகவும், ஆன்மிக தலமாகவும் விலங்கி வந்தது. இக்கோயில் அக்காலத்தில் ஊரின் நிர்வாக அமைப்பாக செயல்பட்டுள்ளது.
பெரியநாயகி
அம்மன் கோயில் மதில் சுவர் , கல்யாணமண்டபம், மகாமண்டபம், கருவறை ஆகிய இடங்களில் சைவ, வைணவச் கதைச் சிற்பங்கள் எழிலுற அமைந்துள்ளன.
தேவராக்
கதைச்சிற்பங்கள், விஷ்ணுவின் அவதாரச்சிற்பங்கள், தலவரலாற்றுச்சிற்பங்கள் போன்றவை காணத்தகுந்தவை ஆகும். இக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள திருகாமேஸ்வரர் சம்மே கோகிலாம்பாள் ஆலயமும் அதன் அருகில் சுமார் 500 அடி உயர மலையில் அமைந்துள்ள பொன்மலைநாதர் திருக்கோயிலும் சிற்ப எழில் கொண்ட கோயில்களாகும்.
0 Comments