வேதபுரிஸ்வரர் கோயில்,செய்யாறு

 


சைவக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம் திருவோத்தூர் ஆகும். திருஞானசம்பந்தர் தம் பாடலால் ஆண்பனையை பெண்பனையாக மாற்றிய அற்புதம் நடந்த தலமாகும்.

இவ்வூர் தற்போது செய்யாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள வேதபுரிஸ்வரர் கோயில் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஆறு நிலைகளுடன் காட்சி தருகிறதுசுதை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. கோயிலின் உள்ளே வலப்பக்கம் ஒரு கல்யாணமண்டபம், இடப்புறம் திருக்குளமும் அடுத்து நந்தவனப் பகுதியும் உள்ளன. முன்னால் உள்ள மண்டபத்தின்மீது புதிதாகச் சுதை வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள்முருகன், விநாயர், நடராஜர்ஞானசம்பந்தரும் பனைமரமும் உள்ளன.

ஆலயத்துள் நுழைந்தால் வலப்பக்கம் அம்பாள் சந்நிதி. நேர் எதிரில் இடப்பக்கம் அம்பாளுக்கு சிம்மம், கொடிமரம் உள்ளன. இவற்றுக்குப் பக்கத்தில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே கருவறையில் வேதபுரிஸ்வரர்சிவலிங்கத் திருமேனி, கிழக்கு நோக்கிய சந்நிதி. மேலே விதானம் உள்ளது.

சதுர ஆவுடையார். மூலவரைத் தரிசித்து வெளியே வந்து இடப்பால் உள்ள வழியாக வெளிச்சென்று, சண்டேஸ்வரரைத் தரிசித்து வெளி வரலாம். பாலகுஜாம்பிகை தரிசனம் தனிக்கோயில். பிராகாரம் உள்ளது. நின்ற பழைய திருமேனி. வணங்கி வெளியில் வரும்போது இடப்பால் நவக்கிரகங்கள் உள்ளன. இத்தலத்துப் பெருவிழா தை மாதத்தில் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments