அபௌட் ஆரணி
ஆரணி ஒரு பழையமான நகரமாகும் . தற்போதைய ஆரணி நகரம் தமிழ்நாடு , திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஆரணி கமண்டல நாகா நதிக்கரையில் அமைந்துள்ள பசுமையான நகரமாகும். பல வரலாற்று மற்றும் புராதன நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ள நகரமாக விளங்குகின்றது.
வரலாற்றில் இது தொண்டை மண்டலமாக இருந்தது
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆரணி சென்னைக்கு 142 கி.மீ. மற்றும் காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கிலும், வேலூர் 39 கி.மீ. மற்றும் இராணிப்பேட்டைக்கு 32 கிமீ தெற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் உள்ளது. மேலும் ஆரணி நகரானது விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தென் மாவட்டங்களையும், வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களையும், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பு முனையாகவும் விளங்குகிறது.அதுமட்டுமின்றி, வந்தவாசி, திண்டிவனம், வேலூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு செல்ல ஒரு மணி நேர பயணம் ஆகும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
பழங்காலத்தில் ஆரணி, ஆரண்யம் என அழைக்கபட்டது.
ஏனெனில் இந்தப் பெயர் சமஸ்கிருதம் மொழியிலிருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆர் என்பது அத்தி மரம்; முற்காலத்தில் இந்த இடத்தில் அதிகப்படியான அத்திமரங்கள் இருந்துள்ளன. மேலும், இந்த இடத்தில் கமண்டல நாகநதி ஆறு ஓடுகிறது. நதியும் மரமும் ஆபரணங்களாக உள்ளதால், முறையே (ஆர்+அணி) ஆரணி என்றும், (ஆறு+அணி) ஆறணி என்றறுமாகி, பின் மருவி ஆரணி என இறுதியாகப் பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.
இங்கு அதிக அளவில் ஆரணி மற்றும் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் தழைத்தோங்கியது. வடமாதிமங்கலம் மற்றும் தேவிகாபுரம் போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளில் தறி நெசவு செய்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆரணியில் பட்டு நெசவு விஜயநகரப் பேரரசு காலத்தில் தொடங்கி ஜாகீர் ஆட்சி காலத்திலும் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும் வளர்ச்சி அடைந்தது. தம்பன்ன செட்டியார் என்பவர் அமைத்த பட்டு முறுக்காலையே முதல் ஆலையாகக் கருதப்படுகிறது. பின்னர் அச்சுக்கட்டும் தொழிலை கண்ணையா நாயுடு என்பவரும், பல வண்ணங்களில் சாயமிடும் முறையை வி.விஜயராகவா நாயுடு என்பவரும் கொண்டு வந்தனர். பின்னர் படிப்படியாக பட்டு உற்பத்தி நெசவாளர்களும், பட்டு உற்பத்தி விற்பனையாளர்களும் பெருகினர்.
நகரத்தில் பட்டு நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு புடவைகள், கைத்தறிகள்உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற மின் தறிகள் உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும். ஆரணி சேலை(Arani sarees) என்பது இந்தியநாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும். இந்த சேலைகள் ஆரணியில் உருவாக்கப்படுவதால், ஆரணியை ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY) எனவும் அழைப்பர்.
சேலை என்பது நான்கு கெஜம் முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்.சாடி என்ற சமஸ்கிருத சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[3]தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளன.[32].காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. ஆரணி சேலை உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி, பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை புவிசார் குறியீடுபெற்றுள்ளது.
இந்தியா சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் 75 வது சுதந்திர நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணி பட்டு புவிசார் குறியீடு பெற்றிருந்ததால் சிறப்பு அஞ்சல் மாதிரி உறைகள் அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெளியிட்டார்.
ஆரணி மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப ஆரணி பட்டுப் புடவைகளின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க மத்திய அரசால் ஆரணியில் பட்டு ஜவுளிப்பூங்கா அமைக்க உத்தரவிட்டது.
தமிழகத்தில் அசல் வெள்ளி ஜரிகை இழைகளை பயன்படுத்தி நெசவு செய்யும் கைத்தறி பட்டுச் சேலை குழுமங்களிலியே மிகப்பெரிய குழுமமாக ஆரணி இயங்கி வருகிறது. 35000க்கும் மேற்பட்ட பாரம்பரியமான நெசவு கலைஞர்களைக் கொண்டு ஆரணி இயங்கி வருகிறது.
0 Comments