எந்திர சனீஸ்வரர் ஆலயம்,ஏரிக்குப்பம்

 

ஆரணி படவேடு சாலையில் ஏரிக்குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்று, சனி பகவான் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் அருள் பாலிக்கிறார்.

இரண்டரை ஆண்டுக்கு ஒர முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள திறந்த வெளி கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய ஸ்ரீ சனீசுவர பகவானின் யந்திர நடுவில் அறுகோண வடிவமும், அதன் ஆறுமுனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமன் ஆகியோரது வடிவங்களும் இடம் பெற்றுள்ளன.

நெற்றி போன்ற மேற்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும் அவற்றின் இடையே ஒரு காகத்தின் உருவமும் உள்ளது. . நுழைவாயிலில் சனி பகவான் காகங்கள் இழுத்துச்செல்லும் ரதத்தில் அமர்ந்து இருப்பதுபோன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் அனைத்து நவகிரகங்களும் அதன் வாகனங்களுடன் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments